Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த விஜய் ஆண்டனி

தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த விஜய் ஆண்டனி

புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் தயாரித்த 'அண்ணாதுரை' படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க, இவருக்கும் ஜோடியாக டயானா நம்பிகா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடிப்பது, எடிட்டிங் பணியில் ஈடுபடுவது, 400 தியேட்டர்களில் படத்தினை வெளியிடுவது என்று பல நிகழ்வுலகை முதல் முறையாக செய்திருந்தார்.     

இந்த படம் தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற தலைப்பில் வெளியானது. தமிழில் வரவேற்புகள்  கிடைத்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்து ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் தமிழை விட அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. இதை அடுத்து விஜய் ஆண்டனி நேற்று ஐதராபாத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, படத்தினை வெற்றி அடைய வைத்த தெலுங்கு திரைப்பட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த விஜய் ஆண்டனி