Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிட உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் தற்போது அசுரவதம், நாடோடிகள் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதனை அடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'சுந்தரபாண்டியன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 'அசுரவதம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

'கொடி வீரன்' படத்திற்கு சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் மருது பாண்டியன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் லீனா லலித்குமார், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி