Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விக்ரமின் சாமி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

saamy square movie release date

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படப்பிடிப்பு  தற்பொழுது மும்முரமாக நடந்து வருகிறது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதில் விக்ரம் ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சையின் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியதால் அவருக்கு பதிலாக நடிகை சதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இவர்களுடன்  பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்த படத்தை வருகிற ஜுன் மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு வெளியிடுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் 2003-ஆம் ஆண்டு முதல் பாகம் 'சாமி' வெளியான மே 1-ஆம் தேதி 'சாமி ஸ்கொயர்' படத்தை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விக்ரமின் சாமி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு