Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷ்ணு விஷால் வெளியிட்ட புது பட டைட்டில்

vishnu vishal new film title as jaga jaala killaaddi

இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த 'கதா நாயகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்பொழுது ராம்குமார் இயக்கத்தில் 'ராட்சசன்(சிண்ட்ரெல்லா)' , செல்லா இயக்கத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', சீனு ராமசாமி இயக்கவிருக்கும் 'இடம் பொருள் ஏவல்', எழில் இயக்கத்தில் பெயரிடப்படாத புது படம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் எழில் இயக்கும் புது படத்திற்கு கடந்த நாட்களில் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பு துவங்கப்பட்டது.   

இயக்குனர் எழில் இதற்கு முன்பு விஷ்ணுவின் காமெடி படமான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் படத்திற்கு ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் இணைந்துள்ளார். இவருடன் காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.     

 ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் துஷ்யந்த் தயாரித்து வரும் இப்படத்தில் டி.இமான் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் விஷ்ணு விஷால் படத்திற்கு ‘ஜகஜால கில்லாடி' என்ற தலைப்பினை வைத்திருப்பதாக அவரது ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.   

விஷ்ணு விஷால் வெளியிட்ட புது பட டைட்டில்