திமுக அதிமுக ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தின் எதிரே போராட்டம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Mar 06, 2018 12:13 ISTPolitics News
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக இன்று நாடாளுமன்றத்தின் எதிரில் போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளது தமிழகத்தின் திராவிடக் கழகங்கள். இன்று காலை அதிமுக எம்.பி தம்பிதுரையின் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது, இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வும், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற இடதுசரி கட்சிகளும் இணைந்துள்ளார்கள்.
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே நிலவி வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் பிப்ரவரி 16-ம் தேதி தனது தீர்ப்பை அறிவித்தது. அத்தீர்ப்பின் முடிவில் மத்திய அரசு காவிரி நதிநீர் வாரியத்தை நிறுவ ஆறு வாரத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது. அனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை ஆதலால் கடந்த மாதம் அதிமுக சார்பில் நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்ததை அடுத்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திராவிடக் கழகங்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவகைள் ஒத்திவைப்பை தொடர்ந்தே இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டிருக்கின்றது.