Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இனி இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கே

irattai ilai possed edapadi palanisamy

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அணியினர் இரண்டு காட்சிகளாக பிரிந்தது. இதனை அடுத்து டீ.டீ.வி தினகரன் ஆதரவாளர்கள் ஒரு கட்சியும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினர் ஒரு கட்சியுமாக பிரிந்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி கடுமையாக நிகழ்ந்து வந்தது. இதனை அடுத்து இரு கட்சியினரும் வழக்கு பதிவு செய்து தங்களது ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

இதனை அடுத்து இரு கட்சியினரும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு என்று தெரிவித்து வந்திருந்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் போராடி வருகிறது. தீர்ப்பு தேதியை தள்ளிவைத்து கொண்டே சென்றது.  இதனை அடுத்து இன்று வழக்கு நடந்த நிலையில் தீர்ப்பு இன்று 2 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியானது. இறுதியில் இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி அணியினருக்கு என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் முதலமைச்சர் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இனி இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கே