மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்த கட்சியின் பெயரும் உரையாடலும்
வேலுசாமி (Author) Published Date : Feb 21, 2018 23:09 ISTPolitics News
இன்று காலை அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து புறப்பட்ட கமல்ஹாசன் நாளை நமதே அரசியல் பயணம் இறுதியாக மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்து தனது கொடியையும் ஏற்றி வைத்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கமல் கூறியதாவது ' அனைத்து முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் இந்த மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. முறையான கல்வி, அனைத்து தரப்பு மக்களுக்கும் சேர வேண்டும். நல்ல தலைமை, தரமான கல்வி, தடை இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
சாதி மத பெயரால் விளையாடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டும்.இதற்கு உதாரணமாக எப்படி நடக்க வேண்டும் என்பதை செய்து காட்டுவோம். தலையோங்கியுள்ள ஊழலை குறைப்பதில் நமக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதுநாள் வரையில் வேடிக்கை பார்த்து வந்தோம். இனிமேல் அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு என்னவென்று தெரியாமல் இருந்து விட்டீர்கள்.
என்னால் காவிரியில் தண்ணீர் வாங்கி தர முடியுமா என்று கேட்கிறார்கள். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமின்றி ரத்தத்தைக் கூட என்னால் வாங்கி கொடுக்க முடியும். நான் ரத்த தானத்தை சொல்றேன். பெங்களூரை சேர்ந்த எனது சகோதரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து ரத்ததானம் செய்து இருக்கிறார்கள். அதனால் எதையும் பேசித் தீர்க்க முடியும்.
நாங்கள் கிராமங்களை தத்தெடுப்பதை கேலி செய்கிறார்கள். உடனே செய்துமுடிக்க நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல, சமூக ஊழியர்கள். தத்தெடுக்கும் கிராமங்களில் அனைத்து வசதிகளையும் செய்வோம். ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்துவோம்.நமது கட்சியில் உள்ள கொடியில் ஆறு க6 ைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும், நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். இந்த கட்சி மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி," என்று அவர் உரையாற்றினார்.