Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே

kamal haasan meets abdul kalam family at rameswaram today

இன்று கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொள்கைகளை பற்றி மக்களிடம் அறிவிக்க உள்ளார். அதற்காக மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். முன்னதாக பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த அப்துல் கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

அதன்படி இன்று தனது நாளை நமதே பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல்கலாம் அவர்களின் வீட்டிற்கு சென்ற கமலை கலாம் அவர்களின் பேரன் சலீம் அவரை வரவேற்றார். பின்னர் கலாம் அவர்களின் புகைப்படம் பதித்த நினைவு பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கியுள்ளார். இதன் பிறகு அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் முத்து மீரான் என்பவரை சந்தித்து நலம் விசாரித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று கொண்டார்.

இதனை அடுத்து அப்துல் கலாம் அவர்கள் படித்த பள்ளிக்கு செல்ல கமல் முடிவு செய்திருந்தார். ஆனால் மாவட்ட கல்வி துறை அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ மக்களை சந்தித்து பேசி வருகிறார். இது குறித்து தற்போது கமல் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் "பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அரசியல் பயணத்தில் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான சினேகன் இணைந்துள்ளார். தற்போது கமலின் அரசியல் பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஏராளமான சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று மாலை 6:30 மணிக்கு மதுரையில் நடக்கும் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சி பெயர் சின்னம் போன்றவற்றை அறிவிக்க உள்ளார். கமல்ஹாசனின் கட்சி பெயர் "திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்" என்ற வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே