ரஜினி ரசிகர் மன்றம் இப்போ ரஜினி மக்கள் மன்றம்
ராசு (Author) Published Date : Jan 06, 2018 22:50 ISTPolitics News
நடிகர் ரஜினிகாந்த் 2017-இன் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்தார். நான் அரசியலுக்கு வருவது உறுதி. புதிய கட்சியை துவங்கி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன், எனது ஆட்சி சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். இவருடைய அறிவிப்பிற்கு ரசிகர்கள் தீபாவளி போல் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை அடுத்து பல்வேறு அரசியல் பிரமுகர்களிடம் ஆதரவும், எதிர்ப்புகளும் சரமாரியாக கிளம்பியுள்ளது.
கட்சியில் சேர நினைப்பவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்காக புதியதாக இணையதள வசதியை அறிமுகப்படுத்தினார். இதில் தற்போது வரை 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றம், 20 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இன்னும் பதிவு செய்யப்படாதது 30 ஆயிரம் மன்றங்கள் உள்ளது. இந்நிலையில் தற்போது 'அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' என்பதை 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.