Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரின் முதல் வெற்றி

நேற்றைய ஆட்டத்தால் டெல்லி அணி இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கொரை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் T20 போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 26 வது போட்டி நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடந்தது. டெல்லி அணி முன்னதாக நடைபெற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் தொடர் தோல்வியால் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். இந்த முடிவு நானாக எடுத்த முடிவு, டெல்லி அணியை முன்னின்று நடத்த விரும்பவில்லை டெல்லி அணிக்காக இறுதி வரை துணைநின்று செயல்படுவேன் என்று கவுதம் கம்பீர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

பின்னர் டெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து டெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி கொல்கத்தாவை எதிர்கொண்டது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என ரசிகர்கள் விரும்பினர். இதன் பிறகு நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் கொலின் மூன்றோ ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர்.

இந்நிலையில் முன்ரோ 33 ரன்களில் இருக்கும் போது அவுட் ஆனார். இதன் பிறகு அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.  ஷ்ரேயஸ் ஐயரும், ப்ரித்வியும் அதிரடியாக ஜோடி சேர்ந்து சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினர். அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்த ப்ரித்வி ஷா 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு பிறகு களமிறங்கிய ரிஷாப் பாண்ட் டக் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மெக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி வலுவாக அமைந்தது. இருவரும் இணைந்து சிக்ஸர், பவுண்டரி என அரங்கத்தை அதிர வைத்தனர்.

ஷ்ரேயஸ் ஐயரின் வலுவான ஆட்டத்தால் கொல்கத்தா அணிக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 93 ரன்களை எடுத்து அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்தார். இதனை அடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இதில் க்றிஸ் லின் இரண்டாவது ஓவரிலே அவுட் ஆனார். இவரை அடுத்து களமிறங்கிய உத்தப்பாவும் அடுத்த ஓவரிலே ஆட்டமிழந்தார்.

இதில் சுனில் நரேன் அதிரடியாக விளையாடி 26 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவரும் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கேப்டன் தினேஷ் கார்த்திக், கில், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கினர். இதில் மூவரும் சிறப்பாகி ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர். ஆனால் தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும், கில் 37 ரன்களிலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதில் ஆண்ட்ரே ரஸ்ஸலின் சிக்ஸர்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இவரை வீழ்த்த டெல்லி அணியின் வீரர்கள் சற்று தடுமாறினாலும் ஆட்டத்தின் 18வது ஓவரில் அவேஷ் கான் அவரை வீழ்த்தினார்.

இவருக்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20ஓவரில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கொரை டெல்லி அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணி 217 ரன்களையும், மும்பை அணி 213 ரன்களையம் எடுத்திருந்தது. ஆனால் தற்போது இதனை முறியடித்து அதிகபட்ச ஸ்கொராக 219 ரன்களை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது.

இது தவிர இந்த வெற்றியானது டெல்லி அணியின் புது கேப்டனாக பதவியேற்ற ஷ்ரேயஸ் ஐயருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இது முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீருக்கு கவலையாக இருந்தாலும் அதனை மறந்து அணியை வெற்றிபெற செய்த ஷ்ரேயஸ் ஐயரை மனதார பாராட்டினார். இதுவே முன்னணி வீரர்களுக்கான அடையாளம். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி கடைசி இடத்தில் முன்னேறி 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் 30ஆம் தேதியில் எதிர்க்க உள்ளது. இந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணி மோதும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரின் முதல் வெற்றி