இன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம் முழு விவரம்
வேலுசாமி (Author) Published Date : Jan 27, 2018 15:41 ISTSports News
இந்தியாவின் 11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த 20 ஓவர் கொண்ட போட்டியானது வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதால் ஒவ்வொரு அணிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, மும்பை போன்ற அணிகளின் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் மோதி வருகின்றனர். தற்போது இந்த போட்டியில் மொத்தமாக 8 அணிகள் ஒன்றுக்கொன்று மோதுகின்றன.
ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் முதல் அதிகமாக 25 வீரர்கள் இடம் பெறுகின்றனர். இதனை அடுத்து ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்களை தக்க வைத்துக்கொன்று மீதமுள்ள வீரர்கள் ஏலத்திற்கு வந்துள்ளனர். இந்த ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இன்றைய நாள் எல்லாம் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணியில் 4 வீரர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 7 வீரர்களும், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியில் 8 வீரர்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4 வீரர்களும், டெல்லி டெர் டெவில்ஸ் அணியில் 7 வீரர்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 4 வீரர்களும், சன் ரைஸஸ் ஆப் ஐதராபாத் அணியில் 8 வீரர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீரர்களில் 26 வெளிநாட்டு வீரர்களும், 25 வீரர்கள் இந்திய வீரர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் டு பிளெஸ்ஸிஸ், பிராவோ, மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், பொல்லார்ட், ஷிகர் தவான்,ரஹானே போன்ற வீரர்கள் ஆர்டிஎம் (RTM - RIGHT TO MATCH CARD) எனப்படும் முறையில் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்பட்டனர். இன்றைய நாள் ஏலத்தில் 8 அணிகளையும் சேர்த்து மொத்தமாக சுமார் 357 கோடி அணியின் வீரர்களுக்காக செலவிடப்பட்டது. நாளைய ஏலத்திற்கு 8 அணிகளிலும் 283 கோடி எஞ்சியுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாபை சேர்ந்த பந்து வீச்சாளரான அர்பஜன் சிங் சென்னை அணிக்காக இந்த ஆண்டு களமிறங்குகிறார். இவரை சென்னை அணி 200 லட்சம் செலவழித்து வாங்கியுள்ளது. இதனை அடுத்து இவர் டிவிட்டரில் தமிழில் "வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என்று பதிவிட்டுள்ளார். இவரை தொடர்ந்து அஸ்வின் முதன் முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.