பேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்
வேலுசாமி (Author) Published Date : May 19, 2018 16:26 ISTTechnology News
சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் IO 2018 நிகழ்ச்சியில் கூகுள் செயலிகளில் அடுத்தடுத்து வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. அந்த வகையில் கூகுள் செயலிகளும் மிக முக்கியமான ஜிமெயிலிலும் பல சிறப்பு அம்சங்களை இணைத்துள்ளனர். சமீபத்தில் ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை, ஆன்லைன் பணிபுரிவர்தனை, வேகமான மின்னஞ்சல், சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவை அப்டேட் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஜிமெயில் நட்ஜ் ரிமைண்டர் (Gmail Nudge Reminder) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சமானது பயனாளர்கள், தவறவிட்ட மெயில்களை இன்பாக்சில் முதலில் காட்டவும், பாலோ அப் (Follow Up) பிரிவில் சேர்க்கவும் பயன்படுகிறது. இந்த அம்சம் தற்போது இணையதளம் மற்றும் ஆண்டிராய்டு இயங்குதளத்தில் செயல்பட அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனை பெற settings --> Nudges --> Reply and Follow Up பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு கீழே கொடுக்கப்படும் ஆப்ஷனில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அத்தியாவசியமான மெயில்கள் தவிர்ப்பதை தடுக்கலாம்.
இதனை தொடர்ந்து ஜிமெயிலில் மென்ஷன் என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சமானது சமூக வலைத்தளங்களான பேஸ்புக் டிவிட்டரில் @ குறியீட்டை பயன்படுத்தி விருப்பமானவரை தேர்வு செய்யப்படுவது போல் இனி ஜிமெயிலிலும் சேர்த்து கொள்ளலாம். இந்த அம்சமானது ஏற்கனவே கூகுள் செயலியானது கூகுள் ப்ளஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் ப்ளஸில் @ குறியீட்டிற்கு பதில் + குறியீட்டை பயன்படுத்த வேண்டும். இந்த அம்சம் தற்போது ஜிமெயிலில் வழங்கியுள்ளனர். இந்த அம்சம் மூலம் ஜிமெயில் தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக வாய்ப்புள்ளது.