Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கூகுள் குரோமில் ஆப்லைன் ஜிமெயில் மூலம் இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்தலாம்

ஜிமெயிலை இன்டர்நெட் இல்லாமலும் உபயோகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் கூகுள் ஜிமெயிலில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல சிறப்பு அம்சங்களை கூகுள் இணைக்க உள்ளது. ஜிமெயில் மட்டுமின்று கூகுள் செயலிகள் அனைத்திலும் பல நுண்ணறிவு கொண்ட அம்சங்களை இணைக்க உள்ளனர். இதற்கான கலந்துரையாடல் சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் வழங்கிய ஜிமெயில் அப்டேட் மூலம் வேகமான மின்னஞ்சல், சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆப்லைன் ஜிமெயில் போன்ற பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டது.

இதன் மூலம் இனி ஜிமெயிலை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தலாம். அலுவலகங்கள், வேலை தேடுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் விதமாக செயல்பட்டு வரும் ஜிமெயில் ஆன்லைனில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போதைய அப்டேட் மூலம் ஆப்லைனிலும் ஜிமெயிலை பயன்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைவர். ஆப்லைன் ஜிமெயிலை பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜிமெயிலில் வலது ஓரத்தில் உள்ள settings என்ற பட்டனை க்ளிக் செய்து கீழே காண்பிக்கப்படும் ஆப்ஷனில் மீண்டும் settings என்ற பட்டனை க்ளிக் செய்யவேண்டும். பிறகு அதனுள் உள்ள General, Labels, Inbox உள்ளிட்ட ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். இதில் Themes ஆப்சனுக்கு முன் உள்ள Offline பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு ஆப்லைன் ஜிமெயிலை பெறுவதற்கான திரைகள் காண்பிக்கப்படும். Offline பட்டனை க்ளிக் செய்த பின்னர் Install Gmail Offline என்ற பட்டன் காணிப்பிக்கும்.

 இதனை க்ளிக் செய்யும் போது உங்களுக்கு புதிய திரையில் சில கூகுள் செயலிகள் காண்பிக்கப்படும். இதில் ஆப்லைன் ஜிமெயில் (Gmail Offline) என்பதை தேர்வு செய்து கூகுள் குரோமில் இணைத்து கொள்ளவும். இப்போது உங்களுடைய ஜிமெயில் கணக்கில் தற்போது வரை வந்த மெயில்கள் அனைத்தும் Gmail Offlineஇல் இணைக்கப்படும். இதன் பிறகு இனி நீங்கள் ஜிமெயிலை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தலாம். 

கூகுள் குரோமில் ஆப்லைன் ஜிமெயில் மூலம் இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்தலாம்