மற்ற மொழிகளை தமிழில் மொழி பெயர்க்க மைக்ரோசாப்ட் ட்ரான்ஸ்லேட்டர்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 23, 2017 16:15 ISTTechnology News
தற்போது தமிழ் மொழி மைக்ரோசாப்ட் ட்ரான்ஸ்லேட்டரில் (Microsoft Translator)சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் (update) மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து கொள்ளமுடியும். மைக்ரோசாப்ட் ட்ரான்ஸ்லேட்டர் (Microsoft Translator) மற்றும் அதன் 365 செயலிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளதால் உலகில் உள்ள 60 மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்ய முடியும். இந்த உலகில் மிகவும் பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி தற்போது வரை உலகம் முழுவதும் 70 கோடி மக்களுக்கு மேல் பேசி வருகின்றனர். மைக்ரோசாப்டின் இந்த புதிய அப்டேட் மூலம் இந்த வசதியை பிங் (Bing) வலைத்தளம், மைக்ரோசாப்ட் ட்ரான்ஸ்லேட்டரில் (Microsoft Translator), பவர் பாயிண்ட் ஆட-ஆன் (Power Point Add-on) மற்றும் அதன் ஏபிஐ (API) கொண்டு மொழிமாற்றம் செய்ய முடியும். இந்த வசதியுடன் பத்து மொழிகளுக்கு குரல் மாற்றம் செய்ய முடியும்.
மேலும் இதனுடன் மைக்ரோசாப்ட் (Microsoft) செயலிகளான வோர்ட் (Word), எக்ஸல் (Excel), பவர்பாயிண்ட் (Power Point), அவுட்லுக் (Outlook) போன்றவற்றிலும் தமிழ் மொழியை வழங்கியுள்ளது. இந்த ட்ரான்ஸ்லேட்டர் (Translator) மற்ற மொழியில் பேசுவதை கவனித்து அதை தமிழ் மொழியில் எழுத்து வடிவில் அமைக்கும். இந்த வசதியை கொண்டு வாடிக்கையாளர்கள் வழிகளை கேட்கவும், உணவுகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் மற்றவர்களுடன் கலந்துரையாடவும் முடியும். மேலும் இந்த அம்சமானது புகைப்படம், சைகை, விளம்பர சீட்டு போன்றவற்றில் இருக்கும் மொழியை தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் (Microsoft Company) தெரிவித்துள்ளது. இந்த ட்ரான்ஸ்லேட்டரானது ஆண்ட்ராய்டு (Android), ஐஒஸ் (IOS) மற்றும் விண்டோஸ் (Windows) தளங்களில் கிடைக்கிறது.