தென்னிந்தியாவில் யூனிசெப்பின் நல்லெண்ண தூதரக கெளரவ விருது பெரும் முதல் திரைப்பட நட்சத்திரம்
ராதிகா (Author) Published Date : Nov 21, 2017 13:32 ISTWorld News
நடிகை திரிஷா தற்போது நடிப்பு மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை திரிஷா சமீபத்தில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தோன்றி நடித்தார். இதனை அடுத்து நடிகை திரிஷா குழந்தைகள் நலன், கல்வி, விலங்குகள் நலன் போன்றவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். நடிகை திரிஷாவின் சமூக உணர்வை கெளரவிக்கும் வகையில் யூனிசெபின் தூதகர் பதவியை வழங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து நடிகை திரிஷா பேசும்போது "இந்த விருது எனக்கு கிடைத்த மிக பெரிய கவுரவம். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண்கள் 18 வயது வரை கட்டாய கல்வியை மேற்கொண்டால் குழந்தை திருமணத்தை ஒழித்து விடலாம்." என்று தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் நடிகை யூனிசெப்பின் இந்த அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த யுனிசெப்(United Nations Children's Fund or UNICEF) நிறுவனம் முதன் முதலில் இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை அமைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. 1965-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பு பெண் குழந்தைகளின் கல்வி, நோய்த்தடுப்பு, எய்ட்ஸ், குழந்தைகளின் பாதுகாப்பு, குடும்ப சூழலில் குழந்தைகளை வளர செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான விளையாட்டுகளை ஊக்குவிப்பது போன்ற சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.