Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இப்படி ஒரு ரணகளத்திலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய வருவாயை பல மடங்கு அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம். இதனால் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கணக்கில் வருவாயை அள்ளி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக பேஸ்புக் மீது எழும் சர்ச்சைகளால் ஏராளமான பயனாளர்கள் பேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். பேஸ்புக் ஒவ்வொரு பயனாளரும் தங்களது தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளனர். ஆனால் இந்த தகவல்களை வைத்து முறைகேடாக நடந்து கொண்டதாக பேஸ்புக் நிறுவனம் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வந்தது.

வாடிக்கையாளர்களின் தகவல்களை முறைகேடாக உபயோகப்படுத்தியாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் ஒப்பு கொண்டார். பிறகு இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது எனவும் உறுதி அளித்தார். ஆனாலும் இந்த சர்ச்சைகளால் பேஸ்புக் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. பயனாளர்களுக்கு படிப்படியாக குறைந்து வந்ததால் பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்திக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக பேஸ்புக் நிறுவனத்தின் வருவாயானது இந்த ஆண்டு 49 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் 12 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் 65 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த செய்தி அனைத்து மக்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படி சர்ச்சையில் சிக்கி இந்த அளவுக்கு லாபத்தை ஈட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் இதனை முறியடித்துள்ளது.

இப்படி ஒரு ரணகளத்திலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு