Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை அடுத்த ஒரே நாளில் சரி செய்துள்ளது.

சூரியன் உதிக்கும் நாடான ஜப்பான், உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக விளங்குகிறது. உலகின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளுள் ஒன்றான ஜப்பான் இதர நாடுகளை விடவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பல துறைகளில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. ஆனால் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள ஜப்பானில் ஆண்டுக்கு பல முறை எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆண்டிற்கு மட்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

ஆனாலும் நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்படும் போது உடனுக்குடன் சரி செய்து விடுகிறது. இதே போன்று கடந்த திங்கட் கிழமை அன்று 5.9 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 7பேர் வரை உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. காலை வேளையில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சாலைகள், கட்டிடங்கள், போக்குவரத்து போன்றவை கடுமையாக சேதமடைந்தது.

இதனால் மீட்பு குழுவினர் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த இடங்களையும் சரி செய்து வந்தனர். இதில் சாலைகளில் பள்ளம் விழுந்ததில், தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் பிறகு சேதமடைந்த சாலைகளை மீட்பு குழுவினர் அடுத்த ஒரே நாளில் சரி செய்துள்ளனர். இதே போன்று நமது நாட்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அவர்களுடைய சுறு சுறுப்பிற்கு ஏற்றவாறு எவராலும் ஈடுகொடுக்க முடிவதில்லை. சாதாரணமாக மழை வந்தாலே மீட்பு குழுவினர் திண்டாடி வருகின்றனர். நமது நாட்டில் இயற்கை சீற்றங்களின் போது உபயோகப்படும் கருவிகளும், நவீன தொழில்நுட்பமும் மீட்பு குழுவினரிடம் இல்லாமல் போனதே தற்போது மக்கள் திண்டாடுவதற்கு காரணம்.

நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்