Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வசந்தகால சக்குரா பூவின் அழகில் மிதக்கும் ஜப்பான்

ஜப்பான் நாட்டில் சாலையோரங்களில் சக்குரா பூவின் அழகு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் உலகின் சுற்றுலா தளங்களிலும் ஒன்றாக விளங்குகிறது. உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக விளங்கும் ஜப்பான் கடந்த ஆண்டு மட்டும் 28.69 மில்லியன் சுற்றுலா வாசிகளை கவர்ந்துள்ளது. இதற்கு காரணமாக விளங்குவது ஜப்பானின் இயற்கை அழகும், அதன் மரங்களில் மலரும் சக்குரா பூவும் தான். தற்போது ஜப்பான் நாட்டின் தேசிய மலராக "க்ரைசாந்தீமும் (Chrysanthemum)" உள்ளது.

ஆனால் ஜப்பான் நாட்டு மக்கள் சக்குரா பூவை தேசிய மலராகவே ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சக்குரா மலரின் வசந்தகாலத்தை ஜப்பான் நாடு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் சக்குரா பூ மலர தொடங்கியுள்ளது, அதை மக்கள் கொண்டாட துவங்கிவிட்டனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆண்டு சிறிது முன்னதாகவே சக்குரா பூ மலர ஆரம்பித்து அனைவருக்கும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. குளிர்காலத்தில் பொதுவாக மரங்களில் எந்த ஒரு பூக்களும், இலைகளும் இல்லாமல் வறண்டு காணப்படும்.

குளிர்காலம் முடிந்தபின் வசந்த காலத்தில் தான் மரங்களில் இலைகள் வளர்ந்து பின்னர் செழுமையாக காணப்படும். ஜப்பானில் பெரும்பாலான வீதிகளில் சக்குரா மரங்கள் தான் இருக்கும். இதனால் வசந்தகாலம் தொடங்கியபின் முதலில் சக்குரா மலர் வர துவங்கும், இது அதிக பட்சமாக இரு வாரங்கள் மட்டுமே நீடிக்கும். பிறகு உதிர ஆரம்பித்து விடும். இப்படி உதிர ஆரம்பித்த பிறகு சாலையில் சக்குரா பூவின் போர்வையில் நடப்பது போன்ற புதுவிதமான அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும்.

இந்த வருடும் வசந்த காலத்தின் முதல்நாளில் அதிகாலை முதல் மதியம் வரை மிகுந்த பனிப்பொழிவு இருந்தது, மதியம் ஒரு மணிக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. சக்குரா பூ இந்த வருடம் சீக்கிரமாக மலர தொடங்கியுள்ளதால், ஜப்பானில் இருக்கும் அனைத்து வீதிகளிலும் சக்குரா பூவின் காட்சி பொது மக்களின் கண்களுக்கு புது பொழிவை ஏற்படுத்தியுள்ளது.  இதனை காண்பதற்காக ஒவ்வொரு வருடமும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தற்போது சக்குரா பூவானது மலர தொடங்கிய நிலையில் ஜப்பான் மக்கள் அதனை உற்சாகத்துடன் கண்டு கழித்து வருகின்றனர். ஜப்பானில் ஓரிரு இடங்களில் இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு விழாக்கள் நடக்க உள்ளது. இதனை காண்பதற்கு அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

வசந்தகால சக்குரா பூவின் அழகில் மிதக்கும் ஜப்பான்