ads
பனி மழையின் அழகில் நனைந்த இன்றைய ஜப்பான் புகைப்படங்கள்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Mar 21, 2018 17:19 ISTWorld News
இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு பனிப்பொழிவை பற்றிய அனுபவங்கள் மிக குறைவு. காரணம், அதற்கேற்ற சூழல் நாம் வாழும் இடங்களில் இல்லை. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பனிப்பொழிவு இருக்கும். இதில் காஷ்மீர், சிக்கிம், மணாலி போன்ற பகுதிகளில் மட்டுமே பனி மலைகள் மற்றும் பனிப்பொழிவுகளை காணலாம். தமிழகத்தில் மலை பிரதேசங்களில் ஊட்டி கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற இடங்களில் பனி மூட்டங்கள் மட்டுமே அதிகமாக காணப்படும்.
ஒரு சில நாடுகளில், குறிப்பிட்ட மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். இதில் ஜப்பான் நாடும் அடங்கும். இன்று (21-03-2018) எதிர்பாராத அளவிற்கு ஜப்பான் யோகஹாமா (Yokohama) நகரத்தில் காலையில் மிகுந்த அளவில் பனிப்பொழிவு இருந்தது. ஜப்பானில் இன்று வசந்த காலத்தின் தொடக்க நாள் என்பதால் அனைத்து பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ஜப்பானில் பொதுவாக வசந்த காலத்தில் பனிப்பொழிவு பெரும்பாலும் இருப்பது குறைவு, ஏனெனில் குளிர்காலத்தில் தான் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வசந்த காலத்தின் தொடக்க நாளான இன்று அதிகாலையில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது பிறகு மதியம் ஒரு மணியளவில் பனிப்பொழிவு குறைந்து மழையாக மாறியது.
வேலை நிமித்தமாக ஜப்பான் சென்றதனால் அதிர்ஷ்டவசமாக வசந்த காலத்தின் முதல் நாளில் பனிப்பொழிவை பார்த்து ரசிக்க முடிந்தது. ஜப்பானில் வசந்த காலத்தின் சிறப்பே சகுரா பூ தான். சகுரா பூவின் சிறப்பை கொண்டாடும் வகையில் வாரா வாரம் அதன் சிறப்பை வெளிப்படுத்த குறிப்பிட்ட சில இடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. குளிர்காலத்தினால் இங்கு உள்ள பெரும்பாலான மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்த கிளைகளில் மட்டுமே காணப்படும் நிலையில், வசந்த காலத்தின் பிறப்பால் சகுரா பூவின் ஆதிக்கம் வீதி முழுவதும் உள்ள மரங்களில் காணப்படும்.