ஸ்டேஜ் 3 செய்திகள் (Stage3 News) , உலகில் நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் செய்தி ஊடகங்களில் எங்களது Stage3 நிறுவனமும் ஒன்று. நாங்கள் முதலில் பொழுதுபோக்கு சார்ந்த செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தோம், அதில் சினிமா துறையில் குறிப்பாக தமிழ் சினிமா துறையில் நடக்கும் நிகழ்வுகளை எங்கள் இணையத்தில் வழங்கிக்கொண்டிருந்தோம். திரைத்துறையில் நடக்கும் ஆடியோ லான்ச், புதிய படத்தின் செய்திகள், நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரைப்படங்களின் போராட்டங்கள் எங்கள் குழுவினரால் உங்களுக்கு நாள்தோறும் எங்கள் இணையத்தில் புதுப்பிக்கப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனதால், அவர்களின் விருப்பத்திற்கேற்ப மற்ற துறைகளிலும் செய்திகளை வழங்க ஆரம்பித்தோம், அவைகளில் இந்தியா, உலக நாடுகள், அரசியல், தொழில்நுட்பம், வர்த்தகம், விளையாட்டு, உடல்நலம், சுற்றுப்பயணங்கள் போன்ற துறைகள் சார்ந்த விரைவு செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

எங்களின் முதன்மை நோக்கமே மக்களுக்கு நேர்மையான முறையில் பல்வேறு செய்திகளை எங்களின் குழு மூலம் சேகரித்து முறையாக வழங்க வேண்டும் என்பது தான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிய மக்களுக்கு சுலபமாக புரியும்படி செய்திகளை வெளியிடுவது.

திரைப்படங்கள் மற்றும் இதர துறை சார்ந்த செய்திகளில் தொடர்புடைய அனைத்து பிரிவுளிலும் தகவலைச் சேகரிக்க எங்களது குழு பல பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணிகளை முறையாக செய்ய குழுக்களாக பிரிக்கப்பட்டு செயலாற்றி வருகிறோம். மற்றொரு குழுவால் சேகரிக்கப்பட்ட தகவல்களை செய்திகளாக உருவாக்க வலுவான குழு அமைப்பினர் உள்ளனர். உருவாக்கப்பட்ட தகவல் நல்ல மற்றும் எளிமையான தமிழ் மொழியில் இருக்கும், இது பொதுவான மக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். தற்போது எங்கள் குழு தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறது, படிப்படியாக நாங்கள் பரவலான தகவல்களை சேகரித்து வருகின்றோம்