மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம்
வேலுசாமி (Author) Published Date : Nov 17, 2017 17:30 ISTWorld News
நம் வளிமண்டலத்திற்கு உள்ளே மற்றும் வெளியே இருக்கும் கிரகங்களை ஆராய்ச்சி செய்யும் பணி தற்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது. மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை, காற்றழுத்தம் போன்றவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது வரை சுமார் 24 கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் இந்தாண்டு மட்டும் 7 கோள்களை கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட் ஸ்மித்சோனியான் வானியற்பியல் மையம் இதை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கிரகம் ஒரு சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திற்கு 'ராஸ் 128 ஸ்டார்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ட்ராப்பிஸ்ட் 1 என்ற நட்சத்திரத்தை கண்டறிந்தனர். பூமியின் அளவு கொண்ட 7 கிரகங்கள் இதனை சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ராஸ் 128 நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம் பூமியை விட 1.38 மடங்கு பெரியது. இது அதன் சூரியனிலிருந்து 4.5 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த தொலைவு பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவை விட மிக குறைவு. நம் வளிமண்டலத்திலுள்ள சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள் 36 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. ராஸ் 128 நட்சத்திரத்தை சுற்றிவரும் கிரகம் பூமியிலிருந்து 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா என்று தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.