பிரபு தேவாவின் குலேபகாவலி இரண்டாவது ட்ரைலர்

gulebagavali movie second cut trailer official

இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலுக்கு ஜனவரி 12-இல் வெளிவரவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இந்த படத்தில் இடம் பெறும் 'குலேபா', 'ஹார்ட்டுக்குள்ளே' போன்ற பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும் ஹிந்தியில் காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக நடிகர் சல்மான் கானை வைத்து 'தபங்' படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் 'வான்டட்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சல்மான் கான், பிரபு தேவா கூட்டணி இணைகிறது.


பிரபு தேவாவின் குலேபகாவலி இரண்டாவது ட்ரைலர்


  Tags : 
 • gulebagavali movie trailer
 • gulebakavali movie trailer
 • Gulaebaghavali tamil new movie trailer official
 • gulebagavali movie songs
 • gulebagavali movie album preview video
 • prabhu deva new movies
 • prabhu deva latest heartukulle video songs
 • gulebagavali movie second cut trailer
 • gulebagavali movie second trailer
 • gulebakavali movie second trailer
 • குலேபகாவலி
 • குலேபகாவலி ஹார்ட்டுக்குள்ளே பாடல் வெளியீடு
 • குலேபகாவலி ட்ரைலர்
 • குலேபகாவலி பாடல்கள்
 • குலேபகாவலி இசை
 • குலேபகாவலி ரிலீஸ் தேதி
 • குலேபகாவலி படத்தின் இரண்டாவது ட்ரைலர்