ads
கேரளா மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சலுகை அறிவிப்பு
விக்னேஷ் (Author) Published Date : Aug 17, 2018 11:22 ISTBusiness News
கேரளா மக்கள், தொடர் வெள்ளப்பெருக்கால் அவதி பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அவசர சூழ்நிலையில் உதவும் விதமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஐடியா போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் கால் மற்றும் இன்டர்நெட் டேட்டா போன்ற சலுகையினை அறிவித்துள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், வைபை போன்றவை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பயனாளர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்றவையை ஒரு வாரத்திற்கு வழங்கியுள்ளது. வோடபோன் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய் டாக்டைம் மற்றும் 1GB டேட்டாவை வழங்கியுள்ளது. இந்த சலுகைகள் பயனாளர்களுக்கு தாமாகவே அவர்களது கணக்கில் சேர்க்கப்படும்.
ஆனால் வாய்ஸ் கால் சேவையை மட்டும் பெறுவதற்கு மக்கள், தங்களது மொபைலில் இருந்து CREDIT என்று டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் அல்லது *130*1# என்ற நம்பருக்கு டயல் செய்தால் போதும். மேலும் வோடபோன் நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையினை துண்டிப்பு இல்லாமல் வழங்கியுள்ளது.
இது தவிர ஐடியா நிறுவனமும் 10 ரூபாய் டாக்டைமுடன் 1GB டேட்டாவையும் வரும் ஏழு நாட்களுக்கு வழங்கியுள்ளது. ஐடியா பயனாளர்கள் 10 ரூபாய் டாக்டைம் பெற *150*150# என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும். ஐடியா போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவையை துண்டிப்பு இல்லாமல் வழங்கியுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் வரம்பற்ற அழைப்புகளை வழங்கியுள்ளது.