ரூ 199 ஜியோ போஸ்ட்பெய்டு Vs ரூ 149 ஏர்டெல் போஸ்ட்பெய்டு
வேலுசாமி (Author) Published Date : May 15, 2018 14:59 ISTBusiness News
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின் ஜியோ, எவரும் எதிர்பாராத அளவிற்கு இலவச இன்டர்நெட்டை மக்களுக்கு கொடுத்து பெரும்பாலான மக்களை தன்பக்கம் ஈர்த்தது. பிறகு படிப்படியாக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது. ஆனால் தற்போதும் ஏர்டெல், வோடபோன் போன்ற இதர டெலிகாம் சேவைகளை விட மக்களுக்கு அதிக அளவு இன்டர்நெட், ஆலிமிடேட் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்றவையே குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இதனால் தான் தற்போது ஜியோவின் ஆதிக்கம் தொடர்ந்து பரவி கொண்டே வருகிறது.
முன்னதாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து லாபத்தை ஈட்டி வந்த ஜியோ, தற்போது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் பக்கமும் திரும்பி பார்த்துள்ளது. இதனால் தற்போது மற்ற டெலிகாம் சேவை நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை விட ஜியோ அதிகமாக குறைந்த கட்டணத்தில் வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஜியோ போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு ரூ 199 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு பில் சைக்கிள் (Bill Cycle) என்ற வேலிடிட்டியில் ஆலிமிடேட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவையும், 25GB அதிவேக இன்டர்நெட்டையும் வழங்குகிறது. இதில் இன்டர்நெட் வேலிடிட்டி முடிந்தவுடன் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு GB இன்டர்நெட்டுக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜியோவிற்கு பிறகு, அடுத்த போட்டியாளராக விளங்கும் ஏர்டெல் தொடர்ந்து ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.
முன்னதாக போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 399 திட்டமே குறைந்த கட்டணமாக நிர்ணயித்த ஏர்டெல் தற்போது ஜியோவின் அறிவிப்பால், 149 என்ற திட்டத்தினை ஜியோவுக்கு போட்டியாக அறிமுக படுத்தியுள்ளது. இந்த திட்டம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தற்போது வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1GB இன்டர்நெட்டும், ஆலிமிடேட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை வழங்குகிறது. தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் வலுக்கும் மோதல்களால் பல அதிரடி சலுகைகள் வெளிவருகின்றன. இதனால் மக்கள் குஷியாக காணப்படுகின்றனர்.