ads

ஜியோவுக்கு போட்டியாக நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் வோடபோன்

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆபர்களை வழங்கி வருகிறது.

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆபர்களை வழங்கி வருகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தொடர்ந்து முதலிடத்தில் ஜியோ நிறுவனம் விளங்கி வருகிறது. ஜியோவின் வருகைக்கு பிறகு இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஜியோவின் அதிரடி திட்டத்தினால் முதலில் அன்லிமிடட் இன்டர்நெட் சேவையை அளித்து பயனாளர்களை கவர்ந்தது. பின்னர் புது வாடிக்கையாளர்களின் அதிகப்படியான வருகையால் தனது கட்டண சேவையை வசூலிக்க துவங்கியது.

தற்போது ஜியோ அதிரடி சலுகையான, ரூபாய் 398க்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிடட் கால், எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டா சேவையும், 449 ரூபாயில் 91நாட்கள் வேலிடிட்டி கொண்ட சேவையிலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டி போடும் விதமாக தற்போது ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் முன்னதாக ரூபாய் 348க்கு 28நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடட் கால், எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 2.5ஜிபி நெட் பேக் சேவையில் தற்போது கூடுதலாக ஒரு ரூபாய் மட்டும் வசூலித்து வோடபோன் நிறுவனம் நாளொன்றுக்கு 3ஜிபி அளவிலான நெட் பேக்கை அதிகரித்துள்ளது. 

ஜியோவுக்கு போட்டியாக நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் வோடபோன்