ads
மாணவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
விக்னேஷ் (Author) Published Date : May 15, 2018 15:35 ISTEducation News
தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுசேரியில் நடைபெற்ற இந்த தேர்வில் மொத்தமாக 9,07,620 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியில் நிறைவடைந்தது. தேர்வுகள் நிறைவடைந்த பிறகு மாணவ மாணவியர் அடுத்ததாக கல்லூரி படிப்புகளுக்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு எழுதி ஒரு மாதம் கடந்து வீட்ட நிலையில் மாணவர்களின் தேர்வு தாள்களை திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இதன் பிறகு மாணவ மாணவியரின் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பதிவேற்ற வேலைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து ப்ளஸ் 2 மாணவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடனும், சற்று பயத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாணவர்கள் மதிப்பெண்களை எதிர்பார்ப்பதில் பல வகைகளாக உள்ளனர்.
எப்படியாவது 1190க்கு மேல் எடுத்து பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சிலரும், எப்படியாவது 1000க்கு மேல் வந்தால் போதும் என்று சிலரும், எனக்கு பாஸ் பன்னாள் போதும் என்று சிலரும் பல வகைகளாக காத்து கொண்டிருக்கின்றனர். இதில் அதிகமானோர் எப்படியாவது பக்கத்து வீட்டு பையனை விட அதிகமாக எடுக்க வேண்டும் என்று பயத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருக்கின்றனர். எது எப்படியோ மாணவர்களின் உழைப்பு நாளை காலை தெரிந்து விடும்.