ads

ராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயலில் சிக்கி இதுவரை 27பேர் பலி

நேற்று ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலில் சிக்கி தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலில் சிக்கி தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட இந்தியாவில் கோடை காலம் என்பதால் வெயில் கொளுத்துகிறது. கடுமையான வெப்பத்தால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ஒரு சில இடங்களில் கனமழை, அனல்காற்று, புழுதி புயல் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பிறகு நேற்று தென் இந்தியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் தோழ்ப்பூர், ஆழ்வார், பாரத்ப்பூர் போன்ற இடங்களில் கனமழை பெய்தது.

ஆனால் மழை பெய்த சிறிது நேரத்திற்குள் கடுமையான புழுதி புயல் வீச தொடங்கியது. இந்த புழுதி புயலில் சிக்கி பல மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கார்கள், வீடுகள் போன்றவற்றையும் கடுமையாக சேதமடைந்தது. கடுமையாக வீசப்பட்ட இந்த புழுதி புயலால் ராஜஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இந்த புழுதி புயல் குறித்து தேசிய பேரிடர் ஆய்வு மையம் கூறுகையில் "சக்தி வாய்ந்த இந்த புழுதி புயலால் தற்போதுவரை 27பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தோழ்ப்பூர் பகுதியில் 10 பேரும், ஆழ்வார் பகுதியில் 5 பேரும், பாரத்ப்பூர் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர இந்தபுழுதி புயலில் சிக்கியதால் ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது காயமடைந்த பொது மக்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஒருவர் உயிருக்கு போராடி ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த மக்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமுற்றவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது." என்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானை சூறையாடிய இந்த புழுதி புயலினால் உயிரழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களுக்கு உதவிகள் செய்திட மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும், அவர்களை தேவையான உதவிகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெல்லியிலும் நேற்று இரவு பல இடங்களில் புழுதி புயல் வீசியுள்ளது. நேற்று மாலையில் ஆரம்பித்த இந்த புழுதி புயல் அதிகாலை வரை தொடர்ந்து வீசியுள்ளது. புயலையும் சேர்த்து வெப்பநிலை குறைந்து மழை பெய்தும் வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயலில் சிக்கி இதுவரை 27பேர் பலி