வேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்

       பதிவு : Nov 22, 2017 20:57 IST    
sathyaraj and director pa ranjith demonstration sathyaraj and director pa ranjith demonstration

 சமீபத்தில் ஓவிய கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவர் மதம் மாறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரகாஷ் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், தொல் திருமாவளவன், ராஜூமுருகன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அதில் "சென்னையில் உள்ள கவின் ஓவிய கல்லூரி மாணவர் ரஞ்சித் மதம் மாறியுள்ளார். மாணவரின் மதமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவர் பிரகாஷ் வேலூரில் அக்டோபர் 25-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவர்கள் பிரச்சினை என்றால் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். உங்களுக்காக நாங்கள் போராடுவோம். மாணவர் பிரகாஷுக்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையென்றால் வேலூரில் வருகிற 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். " என்று தெரிவித்தனர்.


வேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்