ads

சென்னையில் 10 மருத்துவர்கள் 6 மணிநேரம் போராடி அகற்றிய கால்பந்து அளவு சிறுநீரக கட்டி

சென்னையில் மோகன் ராஜ் என்பவருக்கு கால்பந்து அளவுள்ள சிறுநீரக கட்டியை 10 மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர்.

சென்னையில் மோகன் ராஜ் என்பவருக்கு கால்பந்து அளவுள்ள சிறுநீரக கட்டியை 10 மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவருக்கு வயது 35. இவரை கவனிக்க ஆளில்லாததால் அண்ணா நகரில் உள்ள அனாதைகள் ஆசிரமத்தில் வசித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக தனது வயிற்றுப்புறத்தில் வலது புறத்தில் கால் பந்து அளவுள்ள கட்டியை பதுக்கி வைத்துள்ளார். இதனை தற்போது சென்னை மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றப்பட்டது. இதனை 10 மருத்துவர்கள், 6 மணி நேரம் போராடி நீக்கியுள்ளனர்.

முதலில் சிறியதாக இருப்பதாக உணர்ந்தேன். பின்னர் இவ்வளவு பெரியதாக வளரும் என்று எதிர்பார்க்கவில்லை என மோகன் ராஜ் தெரிவித்துள்ளார். இவர் இவ்வளவு பெரிய கட்டியை வைத்துக்கொண்டு உயிர் பிழைத்தது அதிசயமாக உள்ளது என மருத்துவ கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைமை நிர்வாகியான மருத்துவர் ஆர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மோகன் ராஜ் முதலில் வசதியின்மையால் மருத்துவமனைக்கு செல்ல பயந்துள்ளார்.

பின்பு கட்டி தீவிரமடைய வேறு வழியில்லாமல் மருத்துவமனையை அணுகியுள்ளார். இதன் பிறகு இவரை ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரிய கட்டி ஒன்று வலது சிறுநீரகத்தில் வேரூன்றி இருப்பது தெரிய வந்தது. உடனே இதனை அகற்றாவிட்டால் இந்த கட்டி வலுவடைந்து உடல் உறுப்புகளை கடுமையாக பாதிக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் பிறகு இவருக்கு 6 மணி நேரம் 10 மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை முடிவில் 30x27cm அளவுள்ள கட்டி அகற்றப்பட்டது. இந்த கட்டியானது 8.5 கிலோ எடை கொண்டது. சிகிச்சை முடிவிற்கு பிறகு மோகன் ராஜ் "நீண்ட வருடமாக இந்த கட்டியால் அவதிப்பட்டு வந்தேன். இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாக இறுதியாக இதனை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்து இங்கு வந்தேன். சிகிச்சைக்கு பிறகு எடை குறைந்தவராகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் 10 மருத்துவர்கள் 6 மணிநேரம் போராடி அகற்றிய கால்பந்து அளவு சிறுநீரக கட்டி