ads
எல்ஐசி பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 28, 2017 23:14 ISTஇந்தியா
மிகவும் பிரபலமான பொதுதுறை நிறுவனமான எல்ஐசி (LIC - Life Insurance Corporation) தங்களது வாடிக்கையாளருக்கு ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. சமீப காலமாக எல்ஐசி முத்திரையுடன் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் (SMS) மூலம் தங்களது ஆதாரை இணைக்கலாம் என்ற செய்தி பரவி வருகிறது. இதற்கு பதிலளிக்கவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணை எல்ஐசியுடன் இணைக்க வேண்டும் என்று எல்ஐசி எந்த அறிவிப்பையும் வெளிப்படுத்தவில்லை.
இன்னும் இதற்கான வசதிகள் ஏற்படுத்தவில்லை. வாடிக்கையாளர்கள் இந்த செய்தியறிந்து எல்ஐசியுடன் ஆதாரை இணைப்பதாக நினைத்து ஆபத்தில் சிக்கி கொள்ள வேண்டாம். ஆதாரை இணைப்பதற்கான வசதியை அமல்படுத்தும் முன்னர் வாடிக்கையாளருக்கு நாங்கள் எங்களுடைய இணையதளத்தின் மூலம் தெரியப்படுத்துவோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Notice - regarding linking of Aadhaar Number through SMS pic.twitter.com/wun1sCKyCV
— LIC India Forever (@LICIndiaForever) November 23, 2017