ads

வாகனத்தில் சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

TN theatre parking charges reduced

TN theatre parking charges reduced

தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைமுறை படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியினால் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்பட்டது.  

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பு சங்க தலைவர், நடிகருமான விஷால் கட்டண வசூலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசிடம் கேட்டு கொண்டிருந்தார். 

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசிடமிருந்து வந்த அதிரடி தகவலின் படி :

1. மாநகரங்களில் உள்ள திரையரங்ககளில் கார் -20 ரூபாய், டூவீலர் -10 ரூபாய் 2. நகரங்களில் கார் 15 ரூபாய், டூவீலர் 7 ரூபாய் 3. கிராமங்களில் கார் 5 ரூபாய், டூவீலர் 3 ரூபாய் 4. சைக்கிள்களுக்கு இலவசம்    

இந்த தகவலை விஷால் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Tamilnadu theatre parking chargesTamilnadu theatre parking charges

வாகனத்தில் சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!