ads

மக்களே உஷார் - நாளை முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பொது மக்கள் இன்றே பணபரிவர்தனையை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பொது மக்கள் இன்றே பணபரிவர்தனையை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது பொது மக்களின் வாழ்க்கையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை போன்றவை அடிப்படை தேவையாகி விட்டது. ஒரு நாள் ஏடிஎம், ஆன்லைன் பணபரிவர்தனை போன்றவை செயல்படாமல் போனால் மக்கள் தள்ளாட வேண்டியதுதாம். அந்த அளவிற்கு பொது மக்களின் வாழ்க்கை டிஜிட்டலில் மாறியுள்ளது. மக்களுக்கு வங்கிகளும் அதன் சேவைகளும் அவசியமானது என்பதால் வங்கிகள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன.

இது மக்களுக்கு சவுகரியமாக இருந்து வருகிறது. ஆனால் நாளை முதல் வங்கிகளுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். நாளை மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் 28 மற்றும் 29ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

ஆனால் திங்கட்கிழமை 30ஆம் தேதி புத்த பூர்ணிமா என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயல்படாது. இதன் காரணமாக பொது மக்கள் முன்கூட்டியே தேவையான பணங்களை எடுத்துக்கொண்டு பணப்பரிவர்த்தனை இன்றே முடித்து விட வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் வங்கிகள் இன்று ஒரு நாள் மட்டும் முழு நேரமும் செயல்பட்டு வருகிறது.

மக்களே உஷார் - நாளை முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை