ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் பலி

       பதிவு : Dec 15, 2017 18:34 IST    
banwarilal purohit banwarilal purohit

கடலூரில் உள்ள வண்டிப்பாளையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். இதனை அடுத்து அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த கீற்று மறப்பை விலகி பார்த்த போது பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். ஆளுநரை பார்த்ததும் அந்த பெண் அலறியுள்ளார். இதனை அடுத்து ஊர் மக்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.

பின் கடலூரில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புதுகல்பாக்கம் அருகே சிலர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த அவரது பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் அறியப்பட வில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் பலி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்