ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை
ராசு (Author) Published Date : Nov 10, 2017 18:00 ISTஇந்தியா
ஹைதராபாத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் எட்டாவது உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் ஹைதராபாத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாலும் இன்று முதல் ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்திர் ரெட்டி இதற்கான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஹைதராபாத் நகரின் பொது இடங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி வரை பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோர் மீது தண்டனை சட்டம் 188-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.