ads

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தமிழகத்தில் புதிய சட்டம்

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தமிழகத்தில் புதிய சட்டம்

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தமிழகத்தில் புதிய சட்டம்

மருத்துவர்கள் மற்றும் சாதாரண நபர் கொரோனா நோய் தொற்றால் இறந்த போது அந்த பகுதி மக்கள் அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் இறங்கினர். இவர்களை யாராவது தூண்டி விடுகிறார்களா அல்லது அறியாமையில் இவ்வாறு செய்கிறார்களா என்பது இவர்களுக்கு தான் தெரியும்.

மருத்துவர்கள் மக்களுக்காக கொரோனா நோயை எதிர்த்து போராடும்போது இறந்துள்ளனர், இவர்களுக்கு மக்கள் எந்த ஒரு மரியாதையும் கொடுக்காதலால், பல மருத்துவர்கள் மிகுந்த மனவேதனையுடன் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இவர்களுக்கு உறுதுணையாக இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்த அறிக்கையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதை தடுக்கும் செயலில் ஈடுபடுவோர் மீத கடுமையான சட்டம் பாயும் என தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் விவரங்கள், " கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதை தடுக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, பிரிவு -74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். "

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தமிழகத்தில் புதிய சட்டம்