ads
தமிழகத்தில் கொரோனா வைரஸ், முன் எச்சிரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
விக்னேஷ் (Author) Published Date : Mar 05, 2020 12:37 ISTஇந்தியா
தமிழகத்தில் கொரோனா வைரஸ், முன் எச்சிரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: கடந்த வாரம் கொரோனா வைரஸ் வட இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் திருச்சி அரசு மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 11 மாத குழந்தையும் இருக்கிறது.
திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதற்கு அறிகுறியான சளி மற்றும் காய்ச்சல் இருப்பதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக இவர்களை தனிமை படுத்தப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறார்கள்.
போன வருடும் டிசம்பர் மாதம் உலகமே அஞ்சப்பட்ட நோய் கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இந்தியாவில் வராமல் இருந்த கொரோனா வைரஸ் இந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவியுள்ளதாக உறுதி படடுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் இது கோடை காலம் என்பதால் மக்கள் கொரோனா வைரஸ் வராது என்று இருந்தனர்.
ஆனால், வேற்று நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகள் மூலம் பரவியுள்ளது. விமான நிலையங்கள் பெரும்பாலும் ஏர் கண்டிஷனிங் வசதிகளுடன் இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, விமான நிலையங்களில் பலத்த பரிசோதனைக்கு பின் பயணிகள் வெளியில் செல்ல அனுமதிக்க படுகின்றனர்.