ads

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி - நடிகர் சரத்குமார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி - நடிகர் சரத்குமார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி - நடிகர் சரத்குமார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததின் காரணத்தினால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் சரத்குமார் பின்வருமாறு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் விறல் விட்டு எண்ணக்கூடிய பெண் தலைவர்களில் முதல் ஐந்தில் இடம்பிடிக்கும் அளவிற்கு ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழகத்தின் அரசியலிலும், இந்திய அரசியலிலும் அசைக்க முடியாத நம்பிக்கையாக வாழ்ந்து மறைந்தார் புரட்சி தலைவி.

இந்திய தேசத்தில் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்ததற்கு நமது முன்னாள் முதலமைச்சரும் அவரது தொடர்ந்த முயற்சிகளும், மாநிலத்தை கட்டுக்கோப்பாக வலி நடத்திய அவரது திறமைகளும் தலைமை பண்பும் அதன் மூலம் அவருக்கு தேசிய தலைவர்களிடம் பெற்ற மதிப்பும் மரியாதையும் என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. தற்போது தமிழகத்தை மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் வஞ்சிக்கும் முறையே, பெருமை மிக தலைவர் இன்று இல்லையே என உணர வைக்கிறது.      

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அவர் கையாண்ட விதம் ஒன்றே அவரது ஆளுமை திறனுக்கு சாட்சி. அவர்தம் இழப்பை இன்று வரை உணரும் தமிழக மக்களுடனும், அவரில்லாமல் வாடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக சகோதரர்களுடனும் இணைந்து புரட்சி தலைவி அவர்களுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்   

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி - நடிகர் சரத்குமார்