ads

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு

லெனின் சிலை உடைப்பு.

லெனின் சிலை உடைப்பு.

உக்ரைனில் மட்டும் அல்ல திரிபுராவிலும் தூக்கி எறியப்பட்டார் லெனின்.

கடந்த 2017-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இடதுசாரிகள் குரு என கருதப்படும் லெனினின் சிலைகள் அத்தனையும் இடித்து தள்ளப்பட்டது. அது போன்ற ஒரு சம்பவம் இன்று இந்தியாவிலும் அரங்கேறியிருக்கிறது. 

திரிபுராவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி கட்சியான சிபிஎம்(ஐ)-ன் ஆட்சி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் சமீபத்தில் நடந்த 2018-ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் முடித்துவைக்கப்பட்டது. அதன் விளைவாக பாஜக தொண்டர்களால் திரிபுராவில் உள்ள அணைத்து இடதுசாரிகளின் அலுவலகங்களும் வீடுகளும் சூறையாடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் தெற்கு திரிபுராவில் உள்ள லெனின் சிலையும் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் பல வெற்றிக் கலியாட்டங்கள் இடதுசாரிகளின் மேல் பாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடதுசாரி அலுவலகங்களுக்கு தீயிடல், இடதுசாரி தொழிலாளர் சங்கங்களின் மீது தாக்குதல்கள், கடைகள் சூறையாடல் போன்றவை அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்று காலை ஒன்பது மணி அளவில் தெற்கு திரிபுராவிலுள்ள பெலோனியா என்ற ஊரின் மத்தியில் அமைந்திருந்த லெனினின் சிலை புல்டோசர் கொண்டு தள்ளப்பட்டதாகவும் அப்போது பாஜக தொண்டர்கள் "பாரத் கி ஜெய்" என்று முழக்கமிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் செய்தியாளர்களுக்கு பகிர்ந்தனர். இது தொடர்பாக பல கீச்சுகள் டுவிட்டரில் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் திரிபுர கவர்னரிடமும் போலீஸ் உயரதிகரியிடமும் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார். திரிபுராவில் புதிய ஆட்சி பொறுப்பிற்கு வரும்வரை கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவருமாறு அவர் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. 

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு