ads
மதுரையில் தன் குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்க பள்ளிக்கு குண்டு மிரட்டல் விடுத்த தாய்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 11, 2017 22:37 ISTஇந்தியா
மதுரையில் சிம்மக்கல் அருகே சுப்ரமணியபுரம் பகுதியில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. மாணவ மாணவியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து பள்ளி வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. அப்போது அங்குள்ள இரண்டு பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பள்ளிகளில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் வெடித்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி அதிகாரிகள் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ மாணவியரையும் பள்ளியை விட்டு வெளியேற்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.
இதனை அடுத்து வெடி குண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாய்களுடன் வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் வெடிகுண்டு இருப்பதாக தகவல் ஏதும் தெரியவில்லை. இதனை அடுத்து இறுதியில் அந்த மிரட்டல் ஒரு போலி என கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த சரவணன் மனைவி பாண்டிச்செல்வி மீது ஜெய்ஹிந்த்புறம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது விசாரித்தனர். விசாரணையில் அவர் அந்த பள்ளிகளில் படிக்கும் தனது மகன் மற்றும் மகளுக்கு விடுமுறை தேவைப்பட்டது. அதனால் தான் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்தேன் என்று அவர் தெரிவித்தார்.