ads

உதகையில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஊட்டியில் மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊட்டியில் மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் அரசு பேருந்துகளின் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அரசு பேருந்துகளின் பராமரிப்பின்மை, ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் குடி போதை போன்ற பல காரணங்களால் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதுவும் தற்போது மழைக்காலம் என்பதால் விபத்துகள் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். இதனால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஊட்டியில் அரசு பேருந்து 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உதகையில் இருந்து மேட்டுபாளையத்திற்கு பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் வெளிவர முடியாமல் பேருந்தில் சிக்கி கொண்டனர். இதனால் 7 பேர்வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை கண்ட பொது மக்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து விபத்தில் சிக்கி கொண்ட பயணிகளை மீட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா உடனடியாக விபத்து பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரியப்பட வில்லை. 

விபத்தில் உயிரிழந்த, படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்த, படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

உதகையில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து