ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 'ஐ.எப்.எஸ்.சி' குறியிடு மாற்றம்

       பதிவு : Dec 11, 2017 10:00 IST    
state bank of india ifsc code state bank of india ifsc code

ஐ.எப்.எஸ்.சி குறியிடு வங்கிகளின் அடையாளத்தை காண்பதற்கு வசதியாக வங்கிகளுக்கு தரப்பட்டுள்ளது. ஐ.எப்.எஸ்.சி குறியீடு 11 இலக்க எங்களை கொண்டு ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தற்போது பாரத் ஸ்டேட் பேங்க் தனது 1300 கிளைகளில் இந்த ஐ.எப்.எஸ்.சி குறியிடை மாற்றியுள்ளது. மும்பை, ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா, பாட்னா போன்ற பல்வேறு இடங்களில் தனது ஐ.எப்.எஸ்.சி குறியிடை மாற்றியுள்ளது. 

இது குறித்து விரைவில் வாடிக்கையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பாரத் ஸ்டேட் பேங்க் தரப்பில் தெரிவித்துள்ளது. பாரத் ஸ்டேட் பேங்க், தனது இணையதளத்தில் ஐ.எப்.எஸ்.சி குறியிடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாரத் ஸ்டேட் பேங்குடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.எப்.எஸ்.சி குறியிடு பற்றிய விவரங்கள் அறிய SBI IFSC CODE PDF க்ளிக் செய்யவும் 


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 'ஐ.எப்.எஸ்.சி' குறியிடு மாற்றம்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்