ads
தமிழக அரசு தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பு
விக்னேஷ் (Author) Published Date : Nov 30, 2017 13:53 ISTஇந்தியா
தமிழக அரசு தேர்வாணையம் இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் உள்ள 35 பதவிகளில் உள்ள 10,105 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது. சுமார் 1500 வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2300 டாக்டர் பணி இடங்களுக்கும், 1500 கால்நடை டாக்டர் பணி இடங்களுக்கும் தேர்வு மூலம் நிரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.
தமிழக அரசின் மருத்துவம், வர்த்தகம், தொழில் மற்றும் தொல்பொருள் துறைகளில் உள்ள இளநிலை ஆய்வாளர், வேதியியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர் போன்ற 27 காலி பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17, 18 -ஆம் தேதிகளில் எழுத்து தேர்வு நடக்கவுள்ளது. அரசு பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் மார்ச் மாதம் 50 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக அதிகரித்துள்ளது. புதிதாக பதிவு செய்பவர் மட்டும் 200 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்திருப்போர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் ஆதிதிராவிடர், விதவைகள், மாற்று திறனாளிகள், பழங்குடியினர் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதர பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான தகவல்களை அறிய
http://www.tnpscexams.net/TNPSC/
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.