2.0 படத்தின் அக்ஷய் குமார் வேடத்தின் தகவல்

       பதிவு : Nov 04, 2017 13:44 IST    
2.0 படத்தின் அக்ஷய் குமார் வேடத்தின் தகவல்

சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்த 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்ஸன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மிரளவைக்கும் அளவிற்கு அதிரடியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக துபாயில் நடைபெற்றது.    

இப்படத்தின் கதை சம்மந்தப்பட்ட எந்த ஒரு விவரங்களும் தெரியாத நிலையில், ரஜினி நாயகன் மற்றும் அக்ஷய் குமார் வில்லன் வேடங்களில் நடிப்பதாக பஸ்ட் லுக் வைத்து அனைவரும் பேசப்பட்டனர். இருப்பினும் ரஜினி இசை வெளியீட்டில் பேசிய போது அக்ஷய் குமார் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். இதன் மூலம் அவர் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்று தெரிந்தது.    

 

தற்பொழுது வந்த தகவலின் படி அக்ஷய் குமார் வேடம் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் பல கெட்டப்பில் நடித்திருக்கும் அக்ஷய், டாக்டர் ரிச்சர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர் பூமியை பேரழிவிற்கு கொண்டு செல்லும் தீய சக்திக்கு எதிராக போராடும் போது ஆவேசத்தில் முகபாவம் வில்லன் வேடத்தில் மாறப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


2.0 படத்தின் அக்ஷய் குமார் வேடத்தின் தகவல்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்