இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த கலைஞர்கள்

       பதிவு : Jun 06, 2018 18:12 IST    
65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தற்போது விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள கலைஞர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. 65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தற்போது விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள கலைஞர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி கலைஞர்களுக்கு பிலிம்பேர் விருதுகள் கடந்த 65 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 64வது பிலிம்பேர் விருது ஐதராபாத்தில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து 65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளநிலையில் அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய் (மெர்சல்), மாதவன் (விக்ரம் வேதா), விஜய் சேதுபதி (விக்ரம் வேதா), கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று), ராஜ்கிரண் (பவர் பாண்டி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 

சிறந்த நடிகைக்கான விருது பட்டியலில் நயன்தாரா (அறம்), ஜோதிகா (மகளிர் மட்டும்), அதிதி பாலன் (அருவி), ஆண்ட்ரியா (தரமணி) மற்றும் அமலாபால் (திருட்டு பயலே 2) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் சிறந்த இயக்குனருக்கான விருது பட்டியலில் அட்லீ (மெர்சல்), கோபி நயினார் (அறம்), ஹச் வினோத் (தீரன் அதிகாரம் ஒன்று), புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதில் ரசிகர்கள் தங்களுடைய விருப்பமான கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிறந்த நடிகராக விஜயும், சிறந்த நடிகையாக நயன்தாராவும், சிறந்த இயக்குனராக அட்லீயும் தேர்வாக அதிகஅளவு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த கலைஞர்கள்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்