ads

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்

iravukku aayiram kangal movie trailer from january 10th

iravukku aayiram kangal movie trailer from january 10th

ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'பிருந்தாவனம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி எனும் நான்' மற்றும் ராதாமோகன் இயக்கவிருக்கும் பெயரிடப்பட்ட புது படம் என மூன்று படங்கள் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நாட்களில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.    

க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர் சாட்டை, புரியாத புதிர், கொடிவீரன் போன்ற வெற்றி படங்களில் நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது. இவர்களுடன் இணைந்து  ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி எஸ் இசையமைக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.     

'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து வரும் இப்படத்தின் போஸ்டர், டீசர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை வருகிற 10ம் தேதி வெளியிடுவதாக படத்தின் நாயகன் அருள்நிதி அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.     

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்