ads
கூத்தன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கபரிசு அறிவிப்பு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Oct 09, 2018 10:47 ISTபொழுதுபோக்கு
அறிமுக இயக்குனர் ஏஎல் வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூத்தன்'. இந்த படம் நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவில் ஜூனியர் நடிகர் நடிகைகள் ஆகியோரது வாழ்க்கையை தழுவி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தினை நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் புது முக நடிகர் ராஜ்குமார் நாயகனாகவும், புதுமுக நடிகைகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிக்கெட் விற்பனையை புதுமுறையில் அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். இதன் பிறகு தற்போது படத்தை காண வரும் ரசிகர்களுக்கு தங்க பரிசினை அறிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவருடைய அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் கூப்பன் பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த கூப்பன் பெட்டியில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் தங்களது டிக்கெட் நம்பர் மற்றும் முகவரியினை எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும். இதன் பிறகு அனைத்து கூப்பன் பெட்டிகளில் இருந்தும் 18 அதிர்ஷ்டசாலிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 1 பவுன் என மொத்தமாக 18 பவுன் பரிசாக வழங்கப்படும். இதன் மூலம் ரசிகர்கள் கவனத்தை கூத்தன் படம் ஈர்த்துள்ளது. படத்திற்காக இல்லாமல் ஒரு பவுன் தங்கத்திற்காக படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.