விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' யுஏ சான்றிதழ்

       பதிவு : Nov 04, 2017 14:08 IST    
விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' யுஏ சான்றிதழ்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்பொழுது சில படங்களில் நடித்து வருவதோடு இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இவர் நடித்த காளி, அண்ணாதுரை படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. இப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகளவு ரசிகர்களுக்கிடையில் ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

 ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கிய 'அண்ணாதுரை' படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. பிச்சைக்காரன் படத்தினை போன்று தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. தெலுங்கில் ”இந்திரசேனா” என்ற பெயரில் வெளியிட உள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டதால், தெலுங்கிலும் அதிகளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறது.      

 

 ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம் கார்பரேஷனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், எந்த வித காட்சிகளும் விளக்க வில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தினை நவம்பர் 30ல் வெளியிடப்படுகிறது.   
 


விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' யுஏ சான்றிதழ்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்