ads
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு விஷால், ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி
விக்னேஷ் (Author) Published Date : Oct 30, 2017 18:01 ISTபொழுதுபோக்கு
வரலாற்று புகழ்பெற்ற அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கைக்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய இருக்கிறது. இதற்காக பல தரப்பினரிடையே ஆதரவும் பாராட்டுகளும் தெரிவித்துவருகின்றனர். இளம் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இதற்காக தனது பாராட்டுகளை டிவிட்டரில் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ய கனடா என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மூலம் வசூலான தொகையிலிருந்து 16 லட்சம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து திரைப்பட சங்க தலைவர் மற்றும் நடிகரான விஷால் 10 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது,சமஸ்கிருதம், உக்ரைன், ஹிப்ரு மற்றும் செல்டிக் போன்ற பல மொழிகளுக்கு 380 ஆண்டு பழமை வாய்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைந்துள்ளது. ஆனால் சுமார் 8 கோடி பேர் பேசும் நம் தாய்மொழி தமிழுக்கு இல்லை என்பது அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று. இதனையடுத்து தமிழ் இருக்கை அமைய பல வருடங்களாக தமிழ் அறிஞர்கள் முயற்சித்து வந்த நிலையில் முயற்சிக்கு பலனாக தற்போது தமிழ் இருக்கை அமைய உள்ளது அனைவரும் பாராட்டக்கூடிய விஷயமாகும். மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய 40 கோடி நிதியுதவி தேவைப்படும். தமிழக அரசு சார்பில் 10 கோடி வழங்கியதை மிகவும் பாராட்டுகிறேன். இருந்தாலும் இதுவரை 17 கோடி தான் சேர்ந்துள்ளது. மேலும் உலகத்தில் உள்ள அனைத்து தமிழக மக்களும் இதற்கு உதவ வேண்டும். மேலும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க செயலுக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.