மழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்

       பதிவு : Nov 03, 2017 17:30 IST    
மழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்

துப்பறிவாளன் வெற்றி படத்திற்கு பிறகு விஷால் நடித்து தயாரிக்கும் இரும்புத்திரை மற்றும் சண்ட கோழி 2 போன்ற படங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் பி எஸ் மித்ரன் இயக்கும் 'இரும்புத்திரை' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் நடைபெற்று வருகிறது. 

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணத்தினால் படப்பிடிப்புகள் எடுப்பதற்கு படக்குழுவினர் சிரமத்திற்கு உள்ளாகினர். பொங்கலுக்கு இப்படம் வெளிவருவதின் காரணத்தினால் மழைகளை பெரிதும் பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள முக்கிய தெருக்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கி வருகின்றனர்.  

 

இதன் காரணத்தினால் சண்டகோழி 2 படப்பிடிப்புகளை சற்று தள்ளி வைத்து விட்டு, முழு நேரமும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு டிசம்பர் மாதம் சண்டகோழி படப்பிடிப்பில் இணைய இருக்கிறாராம்.   

விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன், கோபி ஜிபிஆர் போன்றவர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மற்றும் ரூபன் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். 

 

 


மழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்