Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா

aathmika in viswasam movie

நடிகர் கார்த்தி நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இதனை அடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். தற்போது நான்காவது முறையாக அஜித் சிவா கூட்டணி 'விசுவாசம்' படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிலர் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தில் பணிபுரியும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஆத்மீகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அறிந்து நடிகை ஆத்மீகா தனது டிவிட்டரில் 'தல படத்தில் நானா? எப்போ? எப்படி?' என்று குழம்பிப்போய் உள்ளார். இதுபோன்ற தகவலை சந்திக்காமல் இருக்க இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தில் அஜித் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் ராயபுரம் பகுதியில் படக்குழு செட் அமைத்துள்ளது.

முன்னதாக வெளிவந்த வேதாளம் படத்தை போன்று இந்த படத்திலும் லோக்கல் கெட்டப்பில் களமிறங்கியுள்ளாராம். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில், காவல் அதிகாரியாகவும், லோக்கல் கதாபத்திரமாகவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி தொடர்ந்து 5 மாதங்கள் நடக்க உள்ளது. இந்த படத்தை இந்த ஆண்டு ரசிகர்களுக்கு தீபாவளியில் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இவர் முன்னதாக அஜித்தின் வேதாளம், விவேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக தல படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை வெற்றி மேற்கொள்ள எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொள்கிறார்.

விசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா